Tamil Jokes Online

Home     அரசியல்     மருத்துவர்     மன்னர்கள்    பள்ளிகூடம்     அலுவலகம்    மாமியார் - மருமகள்     ஒட்டல்     டீ கடை    

 
  இணையத்தில் தமிழ் நகைச்சுவை  
 

காவல் நிலையம் நகைச்சுவை


  • ஹலோ.. போலிஸ் ஸ்டேஷனா? கேடி கபாலியை பிடிச்சி வச்சிருக்கோம்.. சீக்கிரம் வாங்க.

    தப்பிச்சிடாம பார்த்துக்கோங்க... நிறைய மாமுல் பாக்கி இருக்கு...!

  • இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள்.

    அங்கே கொலை விலை போகுதாம்.

  • லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை?

    கரும்பு இன்ஸ்பெட்டரை.

  • சிறைச்சாலைக்குள் ஒரு புதிய கைதி தள்ளப்பட்டான். அவனிடம் அங்கிருந்த பழைய கைதி என்ன குற்றத்திற்காக நீ சிறைக்கு வந்தாய் என்று கேட்டான்.

    கைதி - நான் ஒரு வருடைய தோட்டத்திலிருந்து கயிறு ஒன்றை என் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தேன்.

    ப.கைதி - கயிறு திருடியதற்காகவா உனக்கு சிறைத் தண்டனை தரப்பட்டது?

    கைதி - அந்த கயிற்றின் மறுமுனையில் ஒரு

  • மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி.

    ஏன் சலிச்சிக்கிறீங்க?

    பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு.

  • திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்?

    தொப்பைதான்.

  • என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க.

    ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...!

  • வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க?

    நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...!

  • அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.

    அப்புறம்?

    கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.

    பின்ன என்ன ஆச்சு?

    கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்.

  • கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?

    ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

  • திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!

    போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

     
    மருத்துவர் / மருத்துவமனை |  பஸ் |  அரசியல் |  பத்திரிகையாளர் |  கணவன்- மனைவி |  மன்னர்கள் 
    காதலர்கள் |  சினிமா |  பள்ளிகூடம் |  மாமியார் - மருமகள் |  அலுவலகம் 
    காவல் நிலையம் |  டீ கடை |  அப்பா - மகன் |  கல்லூரி |  ஒட்டல் / உணவகம் |  மற்றவை