Tamil Jokes Online

Home     அரசியல்     மருத்துவர்     மன்னர்கள்    பள்ளிகூடம்     அலுவலகம்    மாமியார் - மருமகள்     ஒட்டல்     டீ கடை    

 
  இணையத்தில் தமிழ் நகைச்சுவை  
 

மன்னர்கள் நகைச்சுவை


  • மன்னா நம் நாட்டுக்குள் ஊடுருவியிருந்த ஒற்றன் நாட்டை விட்டு ஓடிவிட்டான்.

    நல்ல செய்தி அதற்கு ஏன் பதறுகிறீர்கள் மந்திரியாரே?

    நம் இளவரசியும் அவனுடன் ஓடிவிட்டார் மன்னா.

  • கும்பகர்ணனுக்கு பிடித்த மரம் எது?

    தூங்கு மூஞ்சி மரம்.

  • மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.

    என்ன?

    இதற்கு முன் தூதுவாக வந்த புறாக்களை யெல்லாம் நீங்கள் ரோ ஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.

  • மன்னர் இரவு நேர நகர்வலத்தை பன்னிரண்டு மணியோடு முடித்துக் கொள்கிறாரே ஏன்?

    மிட் நைட் மசாலா ரசிகராம் அதான்.

  • படையெடுத்து வந்த எதிரி மன்னனை நம் மன்னர் பக்குவமாக மடக்கிட்டார்...

    எப்படி?

    அந்தப்புரத்தை அப்படியே எழுதி வைச்சிடறதா சொல்லிட்டாரு!

  • அரிசந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது?

    ட்ரூ பிஸ்கட்

  • மன்னர் ஏன் இப்பொழுதெல்லாம் நகர்வலம் போவதில்லை?

    நாய்தொல்லை தாங்க முடியவில்லையாம்.

  • சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தன் மகளை மணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!

    இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

  • போர்கைதி தெரியும், அதென்ன பேர் கைதி.

    அரசரை பேர் சொல்லி கூட்பிட்டானாம்.

  • மகாராணியின் நகைகளை மார்வாடி கடையில் அடகு வைக்கும் போது இவனை கையும் களவுமாக பிடித்து வந்திருக்கிறோம் மன்னா...!

    அடப்பாவிங்களா கைச் செலவுக்கு காசில்லைன்னு நான் தான் யாருக்கும் தெரியாமல் அடகு வைக்கச் சொன்னேன்.

  • போருக்கு போகும் போது மன்னர் மண்வெட்டியுடன் போகிறா ரே ஏன்?

    தோல்வி நிலை வந்தால் சுரங்க பாதை வெட்டி தப்பி செல்லத்த ரன்.

  • மன்னா ஏன் திடீரென்று ஓட்டப் பந்தய பயிற்சி பெறுகிறீர்கள்?

    போரில் புறமுதுகிட்டு ஓட வசதியாக இருக்குமே அதுதான்

  • மொய் கவர்ல என்ன எழுதியிருக்கு?

    சாப்பாடு பிரமாதம் என் கல்யாணத்துக்கு நீயும் எதுவும் செய்யவேண்டாம்மு எழுதியிருக்கு.

  • மன்னா எதிரிநாட்டு அரசர் பெரும்படையுடன் நம் நாட்டை தாக் க வந்து கொண்டிருக்கிறான்.

    அப்படியா உடனே நம் மகாராணியாரை இந்நாட்டு மன்னர் ஆக் கிவிடுவோம்.

     
    மருத்துவர் / மருத்துவமனை |  பஸ் |  அரசியல் |  பத்திரிகையாளர் |  கணவன்- மனைவி |  மன்னர்கள் 
    காதலர்கள் |  சினிமா |  பள்ளிகூடம் |  மாமியார் - மருமகள் |  அலுவலகம் 
    காவல் நிலையம் |  டீ கடை |  அப்பா - மகன் |  கல்லூரி |  ஒட்டல் / உணவகம் |  மற்றவை