Tamil Jokes Online

Home     அரசியல்     மருத்துவர்     மன்னர்கள்    பள்ளிகூடம்     அலுவலகம்    மாமியார் - மருமகள்     ஒட்டல்     டீ கடை    

 
  இணையத்தில் தமிழ் நகைச்சுவை  
 

பத்திரிகையாளர் / எழுத்தாளர் நகைச்சுவை


  • நீங்க எழுதிட்டு வர்ற கிரைம் தொடர் பற்றி நீங்களே புகார் கொடுக்கனுமா? ஆச்சர்யமா இருக்கே...!

    ஆமா சார், உண்மைக் கொலையாளி, யாருன்னு எனக்கே தெரியவில்லை... சீக்கிரம் கண்டு பிடிச்சு சொல்லுங்க கதையை முடிக்கனும்.

  • எழுத பயன்படாத மை எது?

    எருமை.

  • இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை

    அப்படியா...! வெரிகுட்.

    என் அட்ரஸை எழுதினாத்தானே...!

  • அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க

    எப்படி?

    இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்...!

  • மேட்டூர் அணை ஒரு நாளிலேயே ஆறு அடி உயர்ந்தன்னு கட்டுக்கதை விடறாங்க பேப்பர்ல...!

    எப்படி சொல்ற

    நான் தினமும் அணையை பார்க்கிறேன். கொத்தனார் அணை எப்படி கட்டினாரோ, அப்படி தான் இருக்கு.

  • உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?

    எதுங்க?

    உங்க நாலாவது பெண் மேனகாதான்.

  • என்ன ராப்பிச்சை இது என்ன பத்திரிக்கை?

    என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிக்கைம்மா அவசியம் வாங்க.

  • என்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?

    புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!

  • உங்க கதையில உப்பு சப்பே இல்ல...!

    எப்படி சொல்றீங்க?

    நீங்க கதை எழுதியிருந்த பேப்பரை சாப்பிட்டுப் பார்த்தேன்...!

  • அந்த எழுத்தாளர்க்குப் பாராட்டு விழா நடத்தறாங்களே, அவங் க எல்லாம் யாரு?

    பழைய பேப்பர் வியாபாரிங்க.

  • ஒரு செய்தித் தாளுக்கு வந்த விளம்பரம்

    நீங்கள் தற்குறியா எழுதப்படிக்கத் தெரிந்தவரா?

    அப்படி இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.

    நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.

  • நீங்க எழுதின ஜோக் பத்திரிக்கையில பிரசுரம் ஆயிடுச்சே அப்புற ம் ஏன் கவலையா இருக்கீங்க சார்?

    ஏதோ தொலைந்து போகட்டும்னு ஒரு ஜோக் பிரசுரம் செய்துள்ளோம். தொடர்ந்து கதை கதையா ஜோக் எழுதி அனுப்பி கழுத்தறுக்க வேண்டாம்னு எடிட்டர் கிட்ட இருந்து கடிதம் வந்திருக்கே.

  • பணம் சம்பாதிப்பது எப்படின்னு புக் எழுதினீங்கேள

    அதை ஏன் வெளியிடலை?

    அதை வெளியிடறத்துக்கு காசுக்குதான் அலையேறன்.

  • ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிகிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருக்கேன்.

    அதென்ன போலி வாழ்க்கை?

    அவர் சொல்ற ஜோக்குக் கெல்லாம் போலித்தனாம சிரிச்சிக்கிட்டிருக்கேன்!

     
    மருத்துவர் / மருத்துவமனை |  பஸ் |  அரசியல் |  பத்திரிகையாளர் |  கணவன்- மனைவி |  மன்னர்கள் 
    காதலர்கள் |  சினிமா |  பள்ளிகூடம் |  மாமியார் - மருமகள் |  அலுவலகம் 
    காவல் நிலையம் |  டீ கடை |  அப்பா - மகன் |  கல்லூரி |  ஒட்டல் / உணவகம் |  மற்றவை