| பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்? விழுந்தது பலாப்பழம் ஆச்சே
|
| ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற? எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.
|
| உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு? எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.
|
| நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்? பொன் வண்டு.
|
| ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.
|
| டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்? ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
|
| நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க? நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.
|
| அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்? அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.
|
| கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்? உருண்டையாகத்தான்...
|
| ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான். என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை. உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா ஆமாம் எங்கே தொலைத்தாய்? அடுத்த தெருவில் தொலைத்தேன். அதை இங்கே ஏன் தேடுகிறாய்? அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
|
| அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
|
| குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா? நாம கேட்டா கொடுப்பாரா...
|
| உங்க வீட்டில் இன்று சாம்பாரா? எப்படி கண்டுபிடித்தீர்கள்? நான் மூக்காலும் உணர்ந்தவன்.
|
| வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது? எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
|
| கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்? இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.
|
| மிகவும் மக்கான ஊர் எது? மாமண்டூர்.
|
| நம்ம கபாலி ரொம்ப சின்சியர் எப்படி சார்? நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
|
| ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே? நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.
|
| நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான். அப்படி என்ன காரியம் செய்தான்? கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.
|
| மெக்கானிக்கு பிடித்த சோப் எது? வீல் சோப்.
|
| நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்? நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.
|
| வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி? ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.
|
| உள்ளாடை அணியும் ஊர் எது? வாணியம் பாடி
|
| சாப்பிடக்கூடிய ஆணி எது? பிரியாணி
|
| ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்? நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்.
|
| உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா? ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார்.
|
| உங்க வீடு எங்கே இருக்கு ஸார்? அடமான பேங்க்ல இருக்கு ஸார்?
|
| அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை வாங்கினா என்ன ஆகும்? மழையே வராது.
|
| எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற? ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா.
|
| நான் நீச்சல் கத்துக்கேறன் எங்கே...? தண்ணியிலதான்...!
|
| தாத்தா இனிமே கம்பியூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும். அப்படி நீ படிச்சா கிடைக்காதா?
|
| நான் ஹார்லிக்சை அப்படியே சாப்பிடுவேன்? முட்டாள் பாட்டில் எப்படி ஜீரணமாகும்.
|
| கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது? ஏன்? கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே.
|
| இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி அப்படி என்ன வேலை செய்றாரு? தண்ணீர் லாரி வச்சிருக்காரு.
|
| குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு? ஊத்திக்கிச்சு
|
| டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்? மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான்.
|
| ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்? டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி.
|
| உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு என்னவாம்? பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.
|
| குடி குடியைக் கெடுக்குமாடா? நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.
|
| 100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்? அவர்க்கு வயது 102.
|
| எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம் எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.
|
| இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன? உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்.
|
| என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண் டு இருக்க முடியாது. உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா? நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத் தை விட்டு ஓடிடுவேன்.
|
| குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.
|
| மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார். அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பொரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.
|
| பால் எப்போது வெட்கப்படும்? அதன் ஆடையை எடுத்தப்பின்.
|
| காலில் சுத்தின பாம்பு கடிக்குமா? கடிக்காதா? ஏன் கேட்கிறே? உங்க கால்ல ஒரு பாம்பு சுத்தியிருக்கேன்னு கேட்டேன்...!
|
| இந்த காலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு ஆமா சரியா சொன்னீங்க... தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வெச்சீங்க...!
|
| நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ற? பாபுஸ் பேஸ்ட் நீ என்ன சோப் யூஸ் பண்ற? பாபுஸ் போப் அது என் புது பிராண்டா? அட பாபுன்றது என் ரூம் மேட்டோட பேருப்பா.
|
| ஜோதிடம் சொல்பவர், ஐந்து ரூபாய் தந்தால் 2 கேள்விகள் கேட்கலாம். என்று சொனார். இரண்டு கேள்விகளுக்கு ஐந்து ரூபாயா? என்று வந்தவர் கேட்டார் ஆமாம் உங்கள் இரண்டாவது கேள்வி என்ன? என்றார் ஜோதிடம் சொல்பவர்.
|
| கோயில் உண்டியலை திருடியது உண்மையா? உண்மைதான் ஜட்ஜ் ஐயா, ஆனா அதுல இருந்த பணத்தை எடுத்துகி ட்டு உண்டியலை திருப்பி வெச்சிட்டேன்.
|
| ஹேலா நான் குமார் பேசுகிறேன். என் கடனை எப்ப திருப்பி தருவீங்க? சீத்தோட்ல மூன்று குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். ஈரே ரட்டுல 3 குமார்கிட்டே கடன் வாங்கி இருக்கேன். பெருந்துறையில் 6 குமார்கிட்டே கடன் வாங்கியிருக்கேன். யாரே இருந்தாலும், தெளிவா விபரமா பேசுங்க குழப்பாதீங்க.
|
| ராமு - 10 ரூபாய் இருந்தா கொடு சோமு - என்னிடம் சுத்தமா ரூபாய் இல்லை ராமு - பரவாயில்லை, கொடு நான் சுத்தம் செய்து கொள்கிறே ன்.
|
| பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்? முதல்ல பூட்டை பூட்டணும்...!
|
| சாப்பிட முடியாத மீன் எது? விண்மீன்
|
| அதென்ன மாடில மேகக்கூட்டம் மாதிரி மேடை செட் அப்? அது நிச்சயதார்த்தமேடை. கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்டுவது இல்லையா.
|
| பிக்பாக்கெட் ரங்காவின் கல்யாண வீட்டில் ஒரு சௌகரியம் இருக்கு? என்னது? மொய்ப்பணத்தை அவங்களே எடுத்துப்பாங்க.
|
| ஒரு பெண் குளத்தில் நீர் எடுப்பதற்காக 4 தெரு தாண்டி வந்து கொண்டிருக்கிறாள். திடீரென்று வீட்டிற்கு திரும்புகிறாள் ஏன்? குடத்தை கொண்டு போகவில்லை.
|
| டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே
|
| அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு? ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே? அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே.
|
| நாய் ஏன் குரைக்குது? அதுக்கு கூட்டத் தெரியாது.
|
| ஒரு நாள் இரவு வாக்கிப் பாய் கொண்டிருந்த ஜியை திருடன் வழி மறிக்க, இருவரும் கட்டிப் புரண்டார்கள். நீண்ட நேர சண்டையிறுதியில் திருடன் ஜியை தரையில் கிடத்தி அவர் பையிலிருந்த பர்சை எடுத்தான். அதில் 25 பைசா நாணம் மட்டுமே இருந்தது. இந்த 25 பைசாவுக்கா இப்படி சண்டை போட்டாய்? என்று ஜியை திருடன் ஆச்சிரியத்துடன் கேட்டான். இதற்காகவா நீ என்னுடன் சண்டை போட்டாய்? நான் என் ஷுவிற்குள் ஒளித்து வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்கா
|
| மாப்பிள்ளை தனியா தொழில் பண்றவருங்க தனியா எப்படி தொழில் செய்ய முடியும்.
|
| கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி. மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி. மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.
|
| ஏர்போர்டில் ரிசீவ் பண்ண வந்தவர் இருவரின் உரையாடல் நபர்.எ - யாரை அழைத்து செல்ல வந்திருக்கீங்க. நபர் ஏ - 40 வருடத்திற்கு பிறகு என் தம்பி வருகிறான். அவனை அழைத்து செல்ல வந்திருக்கிறேன். நபர். எ - எப்படி அவரை அடையாளம்.
|
| இந்த ஸ்பின் பௌலர் பிரமாதமா போடறாரே? இதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தார்? ஒரு முறுக்கு சீடை கம்பெனியிலே முறுக்கு சுத்தி சுத்தி கொடுத்தாராம்.
|
| என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு? இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.
|
| 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் கடை எது? சாக்கடை
|
| அவர் ஏன் அந்த பொண்ணை அப்படி முறைச்சி பார்க்கிறார்? அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.
|
| நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்? அதுல பல சிக்கல்கள் இருக்கு...!
|
| சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்? இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.
|
| நேத்து திருடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டினானா, ஏன், காலிங் பெல் இல்லை. அதனால் தான்.
|
| எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்கேள ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா? இல்லை. அவருக்கு வயலின் வாசிக்கத் தெரியாது.
|
| வீரப்பன் உபேயாகிக்கும் சோப்? மைசூர் சாண்டல்சோப்...!
|
| மரியாதை இல்லாத பூ எது வாடா மல்லி.
|
| டாக்டர் நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது. சரி, அந்த சோபாவில் போய் உட்காருங்க. இரண்டு சோபா இருக்கே டாக்டர் எதுல உட்காரனும்?
|
| நீச்சல் கற்றுக் கொடுக்கும் நிறுவனத் ஏன் அவர் ஆடி விட்டாரா? ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிட்டார்.
|
| ஏன் குடிச்ச? ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன் அப்படி என்ன கவலை? நான் ரொம்ப குடிக்கிறேன் என்று.
|
| டென்சன் அதிகமானால் என்னவாகும்? லெவன் சன் ஆகும்.
|
| இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு இதில என்ன தடங்கல்? இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல்.
|
| தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...? ஆபிஸ் லியா, வீட்டிலியா....?
|
| மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி? அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்? ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா?
|
| எங்க தாத்தா கடி ஜோக் சொல்ல மாட்டார்... ஏன்? அவருக்குத்தான் பல் இல்லையே.
|
| கம்பி மேல நடந்து காட்றதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான். எப்படி? கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்.
|
| போர் அடிக்கடி நடக்கும் ஊர் எது? போரூர்
|
| கை உள்ள மரம் எது? முருங் கை மரம்
|
| இந்தகாலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு ஆமா சரியா சொன்னீங்க...! தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வச்சீங்க...!
|
| நான் நீச்சல் கத்துக்கிறேன்...! எங்கே? தண்ணியிலதான்...!
|
| நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன். அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.
|
| எதுக்காக தூங்கும் போது கேன்வாஸ் போட்டுக்கிறே? எனக்கு தூக்கத்துல ஓடற வியாதி
|
| அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்? மழை நின்று விட்டதா என்று பார்க்க.
|
| தங்கத்துக்கு மட்டும் தான் கடன் தருவோம். சரிங்க நாளைக்கு என் மகள் தங்கத்தை கூட்டிட்டு வர்றேன்.
|
| சோப்பு கடைக்காரன் பாண்ணை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்? வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா பேசுறா.
|
| யாருமே அழமட்டேங்கிறாங்க அதுக்காக சாவு வீட்டுல டி.வி. நாடகம் போட்டு விடறதா?
|
| பக்கத்து வீட்ல போய் ரேடியோ கேட்டதுக்கு என்னை ஒரு மாதி ரி பார்த்தாங்க? ஏன்? ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்கலை, ரேடியோவே வேணும்னு கேட்டேன்.
|
| என் பூட்டை உடைத்து 5 லட்சம் திருடிட்டு போயிட்டாங்க. பூட்டுக்குள்ளே எப்படியா 5 லட்சம் வச்சிருந்தே?
|
| இவள் பெயர் மங்களம். குழந்தை இல்லை. மங்களம் உண்டாகட்டும்.
|
| என்னது உங்க கண்ணுக்கு சளி பிடிச்சிச்சா...? ஆமாம், கூலிங்க கிளாஸ் போட்டிருந்தேன்.
|
| எதுக்கு கலவரப் பகுதியை சுத்தி கயிற்றால் கட்டி வச்சிருக்காங்க ? கலவரப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கு துன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க...!
|
| பாக்கெட்டில் ரூ. 100 வைத்திருந்தேன் இப்பது 10 ரூபாய் தான் உள்ளது. நீங்க தான் பையனிடம் 100க்கு 90 எடுக்க சொன்னீங்க.
|
| என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா ஏங்க, என்னாச்சு? எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க
|
| 5ல் 7 போகுமா? பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.
|
| அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு என்ன ஊரு....? விருதுநகர்
|
| குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு? தெரியைலேய? குளிக்கும் போதே துவட்ட முடியாதே.
|
| கோழி ஏன் முட்டை போடுது? அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது,
|
| தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு. அப்படியென்ன பண்ணுனீங்க..? சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன்.
|
| நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா? ஆமா
|
| இடுக்கண் வருங்கால் நகுக சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா?
|
| பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? புல்லரிக்கும்
|
| உங்க நாட்டியப்பள்ளியில் மட்டும் என்பொண்ணு ஆடோ ஆடுன்னு ஆடறா... ஆனா வீட்டில் அப்படி ஆடலையே.... என்ன காரணம்? ஏற்கனேவ இரு சாரயக்கடை இருந்த இடமாச்சே
|
| பிரிட்ஜில் தக்காளி வைக்கிறாங்கேள, ஏன்? தக்காளியில் பிரிட்ஜை வைக்க முடியாது
|
|
|
| என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
|
| எங்கு விழுந்தால் அடிபடாது? போட்டாவில்
|
| காக்காவுக்கு ஊரெல்லாம் கடன் தன் குஞ்சை அடமானம் வைக்குதா, எப்படி? காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
|
| இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும். பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...? ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
|
| வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது. 2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது. 3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி? கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்.
|
| உடுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது? 'Addres'
|
| பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.
|
| பூவில் அதிர்ச்சி கொடுக்கும் பூ எது? பாம்பு
|
| இவர் பழக இனிப்பானர் என்ன செய்றார்? ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
|
| ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா? திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
|
| ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க? அது வாயில்லா ஜீவன்.
|
| பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது? சண்டிகர்.
|
| சச்சின் அடிக்காத ரன்? சிம்ரன்
|
| உங்க பட்டாசு கடை எப்படி தீப்பிடிச்சது? மழை பெஞ்சதால, கடைக்குள்ள தீமூட்டி குளிர் காய்ஞ்சேன்.
|
| நான் 5 ரூபாயோட சென்னைக்கு வந்தேன். அப்படியா? இன்னொரு 5 ரூபாய் கொடு திரும்பி கிராமத்துக்கே போய் விடுகிறேன்.
|
| பேச முடியாத வாய் எது? செவ்வாய்
|
| உட்கார முடியாத தரை எது? புளியோதரை.
|
| காக்கா ஏன் கறுப்பா இருக்கு? அது வெயிலில் சுற்றுவதால்.
|
| எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி? என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுபேன், அப்புறம் வெற்றிதான்.
|
| மாப்பிள்ளை அழைப்பு எங்கியிருந்து ஆரம்பம்! சென்டரல் ஜெயிலில் இருந்து.
|
| உங்க வீட்டு வேலைக்காரிக்கு மட்டும் அம்பது ரூபா அதிக சம்பள ம் தர்றியாமே எதுக்கு? பக்கத்து வீட்டு நியூஸை எல்லாம் கேஸெட் பதிவு பண்ணி கொடுத்துவாளே
|
| தபால்காரர் கீழே விழுந்தால் எப்படி விழுவார்? தபால்ன்னு தான்.
|
| ராமுவும், சோமுவும் குலப்பெருமை காரணமாக வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராமு சூயஸ் கால்வாயை கேள்விப்பட்டிருக்கிறாயா? சோமு ஏன் இல்லை. நன்றாகத் தெரியும். எகிப்தில் உள்ளது. ராமு அதை தோண்டியதே என் அப்பாதான். சோமு இதென்ன பெரியசாதனை? நீ இறந்த
|
| கையில் கட்டையோடு எப்போதும் அலைகிறாரே அவர் யார்? கட்ட பிரம்மச்சாரி
|
| கடல் பக்கத்தில் லைட் ஹவுஸ் கட்டிருக்கிறார்கள் ஏன்? லைட் ஹவுஸ் பக்கத்தில் கடலை கட்ட முடியாது அதான்.
|
| வெயிட்டான பறவை எது? கருடன்
|
| சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான். சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள். சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.
|
| எனக்கு ஒரு மொட்டை கடுதாசி வந்திருக்கு எங்கிருந்து? பழனியிலிருந்து.
|
| பன் மேலே தண்ணீர் ஊத்தினால் என்ன ஆகும். தெரியலையே? பன்னீர் ஆகும்.
|
| எங்க வீடு கோயில் மாதிரி.... அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
|
| இந்தியாவில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும்? எல்லா பெட்ரோல் பங்கிலும் கிடைக்கும்.
|
| நீ மீன் பிடிக்க போனப்ப புதுசா ஒரு தீவை கண்டுபிடிச்சியா அப்புறம் என்ன செஞ்ச? பிளாட்டுகள் விற்பனைக்குன்னு போர்டு வெச்சிட்டு என் போன் நம்பர் எழுதிட்டு வந்துட்டேன்.
|
| அந்த கிராமத்தில் எங்க பார்த்தாலும் குண்டுசியா இருக்கு ஏன்? அது மிகவும் பின்தங்கிய கிராமம்.
|
| பைத்தியம் 1 - தாஜ்மஹாலை நான் வாங்கப்போறேன்? பைத்தியம் 2 - அதை நான் இப்ப விக்கமாட்டேன்.
|
| ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...! என்னாச்சி? போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி
|
| உங்களை நம்பி எப்படி கடன் தர்றது? உங்களை நம்பி நான் கடன் கேட்கிறேனே அப்படித்தான்...!
|
| அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.
|
| எங்க தம்பி பயங்கர ஓடுவான், அமெரிக்கா எல்லாம் போயிருக்கான் ஓடியேவா?
|
| ஜோதிடர்லிலே இவர் தான் பெரிய... சக்கரவர்த்தியா? இல்ல புளுகர்.
|
| டேபிள் எப்ப வெட்கப்படும்? அதன் டிராயரை இழுத்தால்.
|
| கப்பல் போவது பெட்ரோலிலா, டீசலிலா? கடலில்.
|
| காலில் என்ன காயம்? செருப்பு கடிச்சிடுச்சுங்க! பின்ன அதை மிதிச்சா, அது சும்மாவா இருக்கும்?
|
| மெழுகுவர்த்தி தொழில் பண்ணனீங்கேள, என்னாச்சு? கையை சுட்டுருச்சு.
|
| அடுக்கு மாடி கட்டிடத்தில் 2 பேர் வசித்தனர் ஒருவர் முதல் மாடியில் இன்னொருவர் எட்டாம் மாடியில் இருவருக்கும் இரண்டு நாளாக சொல்ல முடியாத பகை கோபம். சண்டை ஒரு சமயம் எட்டாம் மாடியில் இருந்தவன், முதல் மாடியில் இருப்பவளை அவமானப்படுத்த நினைத்தான். எங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரவும் என்று வேண்டுகோள் விடுத்தான். கைபை மறந்து போகிறதே என்று ஏமாந்த முதல் மாடிக்காரனும், கஷ்டப்பட்டு எட்டாம் மாடிக்கு சென்றான். வீடு பூட்டியிருந்தது ஒரு போர்டு முன்னால் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் உன்னை எப்படி ஏமாற்றினேன் பார்த்தாயா? என்று எழுதியிருந்தது. முதல் மாடிக்காரன் ஏமாந்ததாககாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்து அந்த போர்டின் வாசகத்திற்கு கீழே இப்படி எழுதினான். நான் தான் வரவே இல்லையே எப்படி ஏமாற முடியும்!
|
| கண்ணகி குடிச்சுட்டு போதையில போனது தப்பாப் போச்சு ஏன்? தீயணைப்பு வண்டிகள் இல்லாத காலம்.
|
| ஹேலோ அது நான் பார்த்து வெச்சிருக்குற செருப்பு, நீங்க வேற ஏதாச்சும் எடுத்துக்குங்க அடப்பாவி இது என்னோட சொந்த செருப்புய்யா.
|
| தோட்டத்தில் சோகமாக இருந்த சிறுமியை பார்த்து பக்கத்து வீட்டுப் பெண் கேட்டாள். ப.பெண் - இந்த தனியா என்ன பண்ணிட்ருக்கே? சிறுமி - செத்துப்போன என் கோல்டன் பிஷ்ஷை புதைச்சிட்டிருக்கேன். ப.பெண் - அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய குழி? சிறுமி - என்னோட கோல்டன் பிஷ் எங்களோட பூனை வயித்துலதானே இருக்கு.
|
| எட்டு பொருள் வாங்கிட்டு வர சொன்னா ஏழு பொருள் வாங்கிட் டு வந்தானா யார் அவன்? ஒன்னு விட்ட தம்பி.
|
| சிங்கத்தை பார்த்து பயப்படாத மிருகம் ஒன்னு சொல்லு? தெரியலையே? இன்னொரு சிங்கம்...!
|
| அந்த டேபிள்ல என்னய்யா தகராறு? பேமிலி ரோஸ்ட் சாப்பிடுறதுல பாகப் பிரிவினை தகராறாம் முதலாளி.
|
| அந்த மந்திரவாதி ஏற்கனவே ஆட்டோ டிரைவரா இருந்திருப்பார்ன்னு எப்படி சொல்றே? பேயை ஓட்டணும்னு சொன்னேன்...! மீட்டருக்கு மேலே எவ்வளவு போட்டுக் கொடுப்பேன்னு கேட்குறாரு!
|
| கப்பல் ஏன் ஆடுது? அது எப்பவும் தண்ணியில் இருக்கே அதான்.
|
| எங்க சார் உங்களை பார்க்கவே முடியலை....? அடடடா போன மாசம் கூட அடையாளம் கண்டுகிட்டு பேசினீங்களே...!
|
| கல்யாண வீட்ல, ரொம்பநேரமா செருப்புகளை உத்து உத்து பார்க்கறீங்கேள, உங்க செருப்பை கானோமோ? ம்ஹும், நல்ல டிசைன் செருப்பா தேடிக் கிட்டிருக்கிறேன்.
|
| கல்யாண மண்டபத்தில் சார், செருப்பை எங்க போடனும்...? என்ன முட்டாள்தனமான கேள்வி. கால்ல தான் போடனும்!
|
| அவர்கிட்ட யாரும் ஐஸ் வைக்க முடியாது. ஏன்? ஏன்னா, அவர் ஐஸ் வியாபாரம் செய்றவர்!
|
| அவர் ஒரு பகுத்தறிவுவாதி அதுக்காக 4 வடையை வாங்கி சாப்பிடாம பிச்சு பிச்சு பார்க்கணுமா....!
|
| மயிலே, மயிலேன்னா மயிலு இறகு போடாது? ஏன்? இறகு போட சொன்னாதானே போடும்.
|
| அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்? இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...!
|
| ஏண்டா வீட்டு வாசல்படியை இடிச்சே? நான் வளர்கிறனே மம்மி...!
|
| இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கல...! அப்படித்தான் மெக்கானிக்கு சொன்னான்.
|
|
|
| மாமா தீபாவளிக்கு என்ன போடலாம்னு இருக்கீங்க? அணுகுண்டு தான் மாப்ளே...!
|
| கோர்ட் வாசலை தாண்டி தாண்டி போறாரே ஏன்? அவர் பரம்பரையே கோர்ட் வாசலை மிதிச்சதில்லையாம்
|
| என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்ச திருடன் கிட்ட இருந்து எனக்கு பார்சல் வந்திருக்கு! என்னன்னு! அவன் அடிச்ச நூறாவது, பர்ஸ் என்னோடதாம். அதுக்காக எனக்கு ஸ்வீட் அனுப்பியிருக்கான்.
|
| திருடன் வந்தால் எங்க நாய் சிக்னல் கொடுத்திடும்...! எப்படி? வேகமாக ஓடிப்போய் பத்திரமா எங்காவது ஒளிஞ்சிக்கும்.
|
| உண்ண முடியாத பண் எது? ரிப்பன்.
|
| அதோ வருகிறாரே அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை பார்த்தவர். அப்படியா அவர் என்ன பண்ணுகிறார்? லாரி ஓட்டுகிறார்.
|
| தோசையை ஏன் திருப்பிப்போடுகிறோம்? அதுவா திரும்பாது.
|
| ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை? பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை. பையன் எங்க மாமா பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான்.
|
| மாப்பிள்ளை நீங்க தண்ணி அடிப்பீங்களா? ரொம்ப நன்றி மாமா, காலையில் இருந்து கல்யாண டென்ஷன். நான் நினைச்சேன் நீங்க கூப்பிட்டிங்க வாங்க.
|
| அந்த பௌலரோட பேண்ட் எப்படி தீப்படிச்சுதாம்? ஒரு மணி நேரமா பந்தை பேண்ட்ல தேய்ச்சுக்கிட்ருந்தாராம்?
|
| முட்டாள் 1 - இந்த புதன் கிரகத்துக்கு போகுறது என்ன அவ்வளவு கஷ்டமா. நாம் நினைத்தால் போகலாம். இல்லையா? முட்டாள் 2 - ஆனால் சூரியன் பக்கத்தில் சென்றால் அப்படியே கருகிச் சாம்பலாகி விடுவோமே. முட்டாள் 3 - அதனால் என்ன, இரவில் பயணத்தை வைத்துக் கொண்டால் போகிறது பகலில் போனால் தானே ப்ராப்ளம்.
|
| எறும்பு யானையிடம் என்னை கைவிட்டு விடாதே என்று அழுததா, ஏன்? எறும்பின் வயிற்றில் யானையின் வாரிசு வளருவதால்.
|
| பால் பேப்பர் யாருக்கு பிடிக்கும்? பால்காரருக்கு தான்!
|
| நீ ஏன் தொடர்ந்து ஒரே கடையில் திருடினாய்? அந்த கடைக்கு நான் ரெகுலர் கஸ்டமர்ங்க.
|
| ேஷவிங் பண்ணும் போது எதுக்கையா நாயை கட்டிப்போடுற? இல்ல சார், அது இரத்தம்னா ரொம்ப விரும்பி சாப்பிடும் சார்...!
|
| ஹேலா கரண்ட் ஆபீஸா, கரண்ட் எப்ப சார் வரும்? தெரியலீங்க உங்க போன் நம்பரை கொடுங்க கரண்ட் வந்ததும் போன் பண்றோம்.
|
| இந்தாங்க லெட்டர்! யாருட்ட இருந்து வந்துச்சு? போஸ்மேன்ட்ட இருந்துதான்...!
|
| பேசாம என் மாமா பொண்ணையே கட்டிக் கலாம்னு தோணுது! பேசாம இருக்க யாரை கட்டினா என்ன?
|
| வாஸ்து நிபுணரை கூட்டி வந்து பார்த்து பார்த்து வீடு கட்டினது த ப்பா போச்சு ஏன் சார்? பீரோவை படுக்க வைக்கணுங்கிறார்.
|
| திடீரென்று செருப்புக்கடை வச்சிருக்கியே எவ்வளவு மூலதனம் போட்டே? மூலதனம் உழைப்புதான் எதிரே இருக்கிற கல்யாண மண்டபத்தில் 7 வருடம் வாச்மேனாக வேலை பார்த்தேன்.
|
| பிளம்பரை ஏன் கெட்மாஸ்டர் அவசரமாவர சொல்றார்? கொஸ்டின் பேப்பர் எங்கேயா லீக் ஆகுதாம்.
|
| என்ன எலுமிச்சைம்பழம் இவ்ளூண்டுதான் இருக்கு? இது எலுமிச்சைம்பழம் இல்லங்க சாத்துக்குடி...!
|
| எங்க வீடு லைப்ரரி மாதிரி அமைதியா இருக்குமா? ஊஹும், யாராவது ஏதாவது பேசிகிட்டே இருப்பாங்க.
|